முகப்பு
இந்தியா

உ.பி.யில் புதிய உச்சம்: ஒரேநாளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா

​உத்தரப் பிரதேசத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரேநாளில் 20,510 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:00 PM
கோப்புப்படம்
பகிர்:


உத்தரப் பிரதேசத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரேநாளில் 20,510 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4,517 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றைய நிலவரப்படி உத்தரப் பிரதேசத்தில் இன்னும் 1,11,835 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முன்னதாக, உத்தரப் பிரதேச முதல்வர் அலுவலக பணியாளர்களுக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டதையடுத்து, முதல்வர் யோகி ஆதித்யநாத் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்த நிலையில் அவருக்கும் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments