முகப்பு
இந்தியா

கேரளத்தில் புதிதாக 8,778 பேருக்கு கரோனா

கேரளத்தில் புதிதாக 8,778 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:00 PM
கோப்புப்படம்
பகிர்:


கேரளத்தில் புதிதாக 8,778 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 65,258 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று இருப்பகு கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 13.45 சதவிகிதம்.

மேலும் 2,642 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 11,25,775 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 

Advertisement

மேலும் 26 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 4,836 ஆக உயர்ந்துள்ளது.

அங்கு 58,245 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments