கர்நாடகத்தில் 11 ஆயிரத்தைத் தாண்டியது இன்றைய கரோனா பாதிப்பு
கர்நாடகத்தில் புதிதாக 11,265 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
கர்நாடகத்தில் புதிதாக 11,265 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதில் பெங்களூரு நகர மாவட்டத்தில் மட்டும் 8,155 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, கர்நாடகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 10,94,912 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
மேலும் 4,364 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 38 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 9,96,367 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 13,046 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 85,480 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 506 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.