முகப்பு
இந்தியா

மேற்கு வங்க காங்கிரஸ் வேட்பாளர் கரோனாவுக்குப் பலி

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மேற்குவங்க காங்கிரஸ் வேட்பாளர் இன்று உயிரிழந்தார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
ரெசால் ஹக்
பகிர்:

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மேற்குவங்க காங்கிரஸ் வேட்பாளர் இன்று உயிரிழந்தார். 

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் முர்ஷிதாபாத் மாவட்டம் சாம்ஷெர்கஞ்ச் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டவர் ரெசால் ஹக். இவர் கடந்த புதன்கிழமை உடல்நலக்குறைவு காரணமாக ஜாங்கிபூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவரது உடல்நிலை மோசமடையவே கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே அவருக்கு கரோனா தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

Advertisement

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று(வியாழக்கிழமை) காலை உயிரிழந்தார். 

294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் 17, 22, 26, 29 தேதிகளில் அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments