முகப்பு
இந்தியா

கேரளத்தில் 42 வயது கன்னியாஸ்திரி கிணற்றில் சடலமாக மீட்பு

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குரீபுழாவில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியைச் சேர்ந்த 42 வயது கன்னியாஸ்திரியின் உடல் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
கேரளத்தில் 42 வயது கன்னியாஸ்திரி கிணற்றில் சடலமாக மீட்பு
பகிர்:


கொல்லம்: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குரீபுழாவில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியைச் சேர்ந்த 42 வயது கன்னியாஸ்திரியின் உடல் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலை என்றும், அவரது தற்கொலை கடிதம், அவரது அறையிலிருந்து கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் மாப்ளி ஜோசப் என்பதும், கருணாகப்பள்ளியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. 

இன்று காலை வழக்கமாக நடைபெறும் பிரார்த்தனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்காததைத் தொடர்ந்து, அவரைத் தேடிய போது, அவர் கிணற்றில் சடலமாகக் கிடப்பதைப் பார்த்து காவல்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. 

விரைந்து வந்த காவல்துறையினர் கன்னியாஸ்திரியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →