இந்தியா

ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு

DIN

புது தில்லி: நாடு முழுவதும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்கும்படி பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் வழங்கப்படும் ஆக்ஸிஜன் உருளைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு, கரோனா நோயாளிகள் உயிரிழப்பதாக தொடர்ந்து புகார்கள் வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது, நாடு முழுவதும் ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அனைத்து ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களிலும் அதன் கொள்ளளவுக்கு ஏற்ப ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களும், அதனை நிரப்பும் இடங்களும் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி அளித்திருப்பதோடு, ஆக்ஸிஜன் உருளைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தடையின்றிச் செல்வதை உறுதி செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT