முகப்பு
இந்தியா

ஒடிசாவில் 10 மாவட்டங்களில் வார இறுதி பொதுமுடக்கம்

அதிகரித்துவரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஒடிசா மாநிலத்தின் 10 மாவட்டங்களில் வார இறுதி பொதுமுடக்கம் விதிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

Updated On : 16 ஏப்ரல், 2021 at 3:41 PM
கோப்புப்படம்
பகிர்:

அதிகரித்துவரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஒடிசா மாநிலத்தின் 10 மாவட்டங்களில் வார இறுதி பொதுமுடக்கம் விதிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துவருகிறது. இதன்காரணமாக தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

இந்நிலையில் ஒடிசா மாநிலத்தின் சத்தீஸ்கர் எல்லையில் உள்ள சுந்தர்கர், சம்பல்பூர், மல்கன்கிரி, பர்கர் உள்பட 10 மாவட்டங்களில் வார இறுதி நாள்களில் பொதுமுடக்கம் விதிக்கப்படுவதாக அம்மாநில தலைமை செயலர் அறிவித்துள்ளார்.

Advertisement

கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டாலும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்த காலகட்டத்தில் புவனேஸ்வர், கட்டாக் மற்றும் பிற நகர்ப்புறங்களிலும் கரோனா நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ளதாக தலைமை செயலர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏற்கெனவே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள 10 மாவட்டங்களில் இரவு பொதுமுடக்கத்தின் நேரம் 3 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.