முகப்பு
இந்தியா

மருத்துவ ஆக்ஸிஜன் விநியோகம் 4 மடங்கு அதிகரிப்பு: அரசு தகவல்

கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான ஆக்ஸிஜன் அளவு 4 மடங்கு அதிகரித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:03 PM
பகிர்:

கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான ஆக்ஸிஜன் அளவு 4 மடங்கு அதிகரித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் ஒரு நாளில் 1,273 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் விநியோகம் செய்யப்பட்டது. ஆனால் ஏப்ரல் 17-ம் தேதி 4,739 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் விநியோகிக்கப்பட்டுள்ளது என்று அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாடு முழுவதும் மீண்டும் அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வழங்கப்பட்டு வரும் ஆக்ஸிஜன் அளவில் பல்வேறு மாநிலங்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

அதனைத் தடுக்க ஆக்ஸிஜன் ஏற்றுமதிக்கு தடை விதித்து உற்பத்தியை அதிகரிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் போன்ற பல்வேறு தனியார் நிறுவனங்களும் மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் வழங்க முன்வந்துள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →