முகப்பு
இந்தியா

தடுப்பூசிகளை முன்கூட்டியே கேட்டுப் பெற மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்

கரோனா தடுப்பூசிகளை தேவைக்கேற்ப முன்கூட்டியே கேட்டுப்பெற வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:03 PM
பகிர்:

கரோனா தடுப்பூசிகளை முன்கூட்டியே கேட்டுப்பெற வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மாநில தலைமைச் செயலாளர்களுடன் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனையில் தேவையான அளவு கரோனா தடுப்பூசிகளை மாநில அரசுகள் கேட்டுப் பெற வேண்டும் என்று அஜய் பல்லா கேட்டுக்கொண்டார்.

கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், காணொலி வாயிலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநிலங்களில் ஏற்பட்டுள்ள படுக்கை வசதி குறைவு, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →