இந்தியா

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம்: உ.பி. அரசு

DIN

அதிகரித்துவரும் கரோனா தொற்றின் மத்தியில் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து ரூ.10 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்படும் என உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

இந்நிலையில் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கரோனா தொற்று விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு உத்தரப்பிரதேச அரசு அபராதம் விதித்து வருகிறது. 

எனினும் மக்கள் தொடர்ச்சியாக அலட்சியமாக இருப்பதாகக் கூறி அபராதத் தொகையை உயர்த்தி அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் எனவும் தொடர்ச்சியாக கரோனா விதிமுறைகளை மீறுபவர்களிடமிருந்து ரூ.10 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்படும் எனவும் உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயில் அதிகரிப்பு: கால்நடைகள் மேய்ச்சல் நேரத்தை மாற்ற அறிவுறுத்தல்

வாக்கு எண்ணிக்கை மையம் அருகில் ட்ரோன்கள் பறக்க தடை: ஆட்சியா்

வெப்ப அலை.. கவனம்!

பறவை காய்ச்சல்: தமிழகத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

திருச்செங்கோட்டில் ரூ. 1.56 கோடிக்கு மஞ்சள் ஏலம்

SCROLL FOR NEXT