முகப்பு
மருத்துவமனையில் அனுமதிக்க ரூ.60,000 லஞ்சம்: இது மத்தியப்பிரதேசத்தின் கோரமுகம்
இந்தியா

மருத்துவமனையில் அனுமதிக்க ரூ.60,000 லஞ்சம்: இது மத்தியப்பிரதேசத்தின் கோரமுகம்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்றால், ரூ.60 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:03 PM
மருத்துவமனையில் அனுமதிக்க ரூ.60,000 லஞ்சம்: இது மத்தியப்பிரதேசத்தின் கோரமுகம்
பகிர்:

இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்றால், ரூ.60 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று இடைத்தரகர் ஒருவர் குடும்பத்தாரிடம் பேசும் ஆடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கரோனா பேரிடரால் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி இல்லாததால், கரோனா நோயாளிகள் உள்பட பலரும் சிகிச்சை பெற முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் மகாத்மா காந்தி நினைவு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒரு நோயாளியை அனுமதிக்க, தரகர் ஒருவரிடம், ஒரு குடும்பத்தினர் பேரம் பேசுவதும், அதில் மருத்துவமனையில் இடம் கிடைக்க வேண்டும் என்றால் ரூ.60 ஆயிரம் தர வேண்டும் என்று அடையாளம் தெரியாத அந்த தரகர் கூறுகிறார்.

இந்த ஆடியோ குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாகவும், காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் மருத்துவமனை டீன் மருத்துவர் சஞ்சய் தீட்சித் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் நாள்தோறும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 4,20,977 ஆக உயர்ந்துள்ளது. ஏப்ரல் 18-ஆம் தேதி அதிகபட்சமாக ஒரே நாளில் 12,248 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.
 
முழு கட்டுரையைப் படிக்க →