முகப்பு
இந்தியா

உத்தரகண்ட்டில் பகுதிநேரப் பொதுமுடக்கத்திற்கான கால அளவு நீட்டிப்பு

உத்தரக்கண்ட் மாநிலத்தில் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்ட இரவுநேரப் பொதுமுடக்கத்திற்கான கால அளவை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On : 21 ஏப்ரல், 2021 at 6:16 PM
கோப்புப்படம்
பகிர்:

உத்தரக்கண்ட் மாநிலத்தில் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்ட இரவுநேரப் பொதுமுடக்கத்திற்கான கால அளவை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் உயர்ந்து வரும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநில அரசுகளும் பகுதிநேரப் பொதுமுடக்கத்தை விதித்து செயல்படுத்தி வருகின்றன. 

இந்நிலையில் உத்தரகண்ட் மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள இரவுநேரப் பொதுமுடக்கத்திற்கான கால அளவை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

Advertisement

அதன்படி இரவு 9 மணிக்கு அமலாகும் பொதுமுடக்கம் தற்போது 7 மணிக்கு தொடங்கி காலை 5 மணி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிற்பகல் 2 மணி முதல் நகர்ப்புற சந்தைகளை மூடவும் மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு கடைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகண்டில் இதுவரை 1,34,012 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.