இந்தியா

கரோனா பரிசோதனை: அறிகுறிகளுடன் 4 மணி நேரம் காத்திருக்கும் அவலம்

DIN

உத்தரப் பிரதேசத்தில் கரோனா அறிகுறிகளுடன் வந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ள 3-4 மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் காஸிப்பூரில் உள்ள எம்.எம்.ஜி. மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாநிலத்தில் நாள்தோறும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கரோனா அறிகுறிகளுடன் வந்தவர்கள் பரிசோதனைக்காக வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அறிகுறியுடன் 3 முதல் 4 மணி நேரத்திற்கு வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வரிசையில் காத்திருப்பவர்களுக்கு தொற்று பரவுவதுடன், முதியோர்கள் கடும் வெயிலால் அவதியுறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் பரிசோதனைக் கருவிகளுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக பரிசோதனை தாமதமாவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

SCROLL FOR NEXT