உ.பி. மருத்துவமனையில் கரோனா பாதித்த பெண் தற்கொலை
உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஜான்சி மருத்துவக் கல்லூரியில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த 50 வயது பெண் தற்கொலை செய்துகொண்டார்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஜான்சி மருத்துவக் கல்லூரியில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த 50 வயது பெண் தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் வியாழக்கிழமை மாலை நிகழ்ந்துள்ளது. இறந்தவர் ஏப்ரல் 18 முதல் சிறப்பு எல்3 கரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயிரிழந்தவர் மௌரானிபூரைச் சேர்ந்த ரேகா தேவி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வியாழக்கிழமை மாலை, ரேகா திடீரென்று படுக்கையிலிருந்து எழுந்து, வார்டின் ஜன்னலில் ஏறிக் குதித்துள்ளார். இதையடுத்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Advertisement
அவரது சடலம் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.