தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் இரங்கல்; ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
மகாராஷ்டிர மாநிலம் விரார் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 13 நோயாளிகள் உயிரிழந்தனர்.
இந்தியாதீ விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் இரங்கல்; ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
மகாராஷ்டிர மாநிலம் விரார் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 13 நோயாளிகள் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் விரார் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 13 நோயாளிகள் உயிரிழந்தனர்.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி உயிரிழந்த கரோனா நோயாளிகளுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'மகாராஷ்டிர மருத்துவமனை தீ விபத்தில் நோயாளிகள் உயிரிழந்தது துயரமானது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து நலம் பெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 நிவாரணமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதி வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.