முகப்பு
இந்தியா

ஆந்திரத்தில் புதிதாக 11 ஆயிரம் பேருக்கு கரோனா

​ஆந்திரத்தில் புதிதாக 11,698 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
கோப்புப்படம்
பகிர்:


ஆந்திரத்தில் புதிதாக 11,698 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4421 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 37 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 10,20,926 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 9,31,839 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 7,616 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய தேதியில் ஆந்திரத்தில் 81,471 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.