முகப்பு
இந்தியா

கேரளத்தில் மேலும் 26 ஆயிரம் பேருக்கு கரோனா

கேரளத்தில் புதிதாக 26,685 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
கோப்புப்படம்
பகிர்:


கேரளத்தில் புதிதாக 26,685 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர் சந்திப்பு மூலம் வெளியிட்டார்.

அதன்படி, புதிதாக 26,685 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,31,155 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 20.35 சதவிகிதத்தினருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

மேலும் 25 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 5,080 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 7,067 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 11,73,202 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி கேரளத்தில் 1,98,576 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.