மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 676 பேர் கரோனாவுக்கு பலி
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 676 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 676 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 67,160 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 42,28,836 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 63,818 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 676 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 34,68,610 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 63,928 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி மகாராஷ்டிரத்தில் 6,94,480 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.