முகப்பு
இந்தியா

ஆக்ஸிஜன் வேண்டும்: மாநில முதல்வர்களிடம் கேஜரிவால் கோரிக்கை

தில்லிக்கு ஆக்ஸிஜன் வழங்கக்கோரி தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அனைத்து மாநில முதல்வர்களிடமும் கோரிக்கை வைத்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
கோப்புப்படம்
பகிர்:


தில்லிக்கு ஆக்ஸிஜன் வழங்கக்கோரி தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அனைத்து மாநில முதல்வர்களிடமும் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது:

"கைவசம் கூடுதல் ஆக்ஸிஜன் இருந்தால் அதை தில்லிக்கு வழங்குமாறு அனைத்து மாநில முதல்வர்களையும் கேட்டுக்கொள்கிறேன். மத்திய அரசு எங்களுக்கு உதவி வந்தாலும், கரோனாவின் தீவிரத்தன்மையால் கிடைக்கப்பெற்ற உதவிகள் அனைத்தும் போதவில்லை."

Advertisement

தில்லியிலுள்ள ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் போதிய ஆக்ஸிஜன் இல்லாததால் 20 நோயாளிகள் உயிரிழந்த நிலையில், ஆக்ஸிஜன் விநியோகத்துக்கு கேஜரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments