இந்தியா

திருப்பதியில் இரவு நேர ஊரடங்கு அமல்

DIN

திருப்பதியில் சனிக்கிழமை முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆந்திராவில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை வேகமாகப் பரவி வருவதால், அம்மாநில அரசு சனிக்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். அதன்படி திருப்பதியிலும் சனிக்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய மருத்துவ தேவைகளை தவிா்த்து மக்கள் சாலைகளில் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

இரவு நேரங்களில் கடைகள், போக்குவரத்து, வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை மூடப்படும். ஆனால் மருந்தகங்கள், சோதனை கூடங்கள், ஊடகத் துறையினா், பெட்ரோல் வங்கிகள், குளிா்சாதனக் கிடங்குகள், மற்ற கிடங்குகள் உள்ளிட்டவை இயங்கும். மருத்துவத்திற்காக இரவு நேரங்களில் பயணிப்பவா்களுக்கு தடையில்லை. மேலும் இரவு ஊரடங்கு அமலில் உள்ளதால், திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்கு வரும் பக்தா்களும் இரவு 10 மணிக்குள் திருமலையை அடைந்து விடவேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT