இந்தியா

குஜராத்தில் மேலும் 9 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு

DIN

கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் குஜராத்தில் மேலும் 9 நகரங்களில் இரவு நேர  ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. 

குஜராத் மாநிலத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அங்கு 8 முக்கிய நகரங்கள் உள்பட 20 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கரோனா பரவலைக் குறைக்க மேலும் 9 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். 

அதன்படி, ஹிம்மத்நகர், பழன்பூர், நவ்சாரி, வல்சாத், போர்பந்தர், பொட்டாட், விராம்காம், சோட்டா உதய்பூர் மற்றும் வெராவல் - சோம்நாத் நகரங்களிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. ஏப்ரல் 28 முதல் நடைமுறைக்கு வரும் இந்த உத்தரவு மே 5 வரை இருக்கும். 


இருப்பினும், மேற்குறிப்பிட்ட நகரங்களில் இரவு நேர ஊரடங்கு நேரத்தில் அனைத்து அத்தியாவசிய சேவைகளும் இந்த நகரங்களில் தொடரும். மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், பழக் கடைகள், மருத்துவக் கடைகள், பால்பண்ணைகள், பேக்கரிகள் ஆகியவை அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT