முகப்பு
இந்தியா

ஆக்ஸிஜன் விரைவு ரயில் மூலம் 70 டன் ஆக்ஸிஜன் தில்லி வந்தடைந்தது

முதல் ஆக்ஸிஜன் விரைவு ரயில், 70 டன் உயிர் காக்கும் ஆக்ஸிஜனை ஏற்றிக் கொண்டு இன்று காலை தில்லி வந்தடைந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:06 PM
திரவ ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட டேங்கர்களை சுமந்து வரும் ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்
பகிர்:


முதல் ஆக்ஸிஜன் விரைவு ரயில், 70 டன் உயிர் காக்கும் ஆக்ஸிஜனை ஏற்றிக் கொண்டு இன்று காலை தில்லி வந்தடைந்தது.

இந்த ஆக்ஸிஜன், தில்லி அரசு மூலமாக, தில்லியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் விநியோகிக்கப்பட உள்ளது.

கடந்த வாரம் முழுவதும் தில்லியில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் நோயாளிகள் பலியான நிலையில், பல மருத்துவமனைகள் புதிய நோயாளிகளை அனுமதிப்பதை முற்றிலும் நிறுத்தியது. மேலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால், சிகிச்சையிலிருந்த நோயாளிகளையும் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றும் நிலை ஏற்பட்டது.

இது குறித்து மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு, வந்து உடனடியாக ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்யுமாறு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, சத்தீஸ்கர் மாநிலம் ராய்காரில் இருந்து இந்த ஆக்ஸிஜஜன் விரைவு ரயில் தில்லி வந்தடைந்துள்ளது. 

நாட்டில் கரோனா தொற்றுப் பரவலுக்கு எதிரான போரில் எந்த ஒரு விஷயமும் தடைக்கல்லாக அமைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் இந்திய ரயில்வே, மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் வழங்கும் பணியை மேற்கொண்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →