முகப்பு
இந்தியா

ஆக்ஸிஜன் ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும்: உயர்நீதிமன்றம்

ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் தனியார் ஆலைகளை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று தில்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Updated On : 27 ஏப்ரல், 2021 at 5:31 PM
பகிர்:


ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் தனியார் ஆலைகளை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று தில்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆலை நிர்வாகம் ஆக்ஸிஜனை முறையாக விநியோகம் செய்யவில்லை என்று புகார் எழுந்தது.

இதனை விசாரித்த தில்லி உயர்நீதிமன்றம், கள்ளச்சந்தையில் ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்து விற்கப்படுவதைத் தடுக்க தில்லி அரசு தவறிவிட்டதாக விமர்சித்தது.

Advertisement

அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி கள்ளச்சந்தையில் ஆக்ஸிஜனை விற்கும் வணிகர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டது.

மேலும், ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் தனியார் ஆலைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் எனவும் தில்லி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.