முகப்பு
இந்தியா

தெலங்கானாவில் ஒரேநாளில் 56 பேர் கரோனாவுக்கு பலி

தெலங்கானாவில் கரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில் ஒரேநாளில் 56 பேர் பலியாகியுள்ளனர். 

Updated On : 28 ஏப்ரல், 2021 at 11:34 AM
தெலங்கானாவில் ஒரேநாளில் 56 பேர் கரோனாவுக்கு பலி
பகிர்:

தெலங்கானாவில் கரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில் ஒரேநாளில் 56 பேர் பலியாகியுள்ளனர். 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,061 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 4,19,966 ஆக உயர்ந்துள்ளது. 

Advertisement

மேலும், தொற்று பாதித்து 56 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை மொத்தம் 2,150 பேர் பலியாகினர். 

நேற்று ஒரேநாளில் அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் மொத்தம் 99,638 பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர்.

தற்போது மருத்துவமனை சிகிச்சையில் 72,133 பேர் உள்ளனர். 5,093 பேர் நோயிலிருந்து மீண்டுள்ள நிலையில் மொத்தம் இதுவரை 3,45,683 பேர் குணமடைந்துள்ளனர். 

மாநிலத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.