புகைப்படக் கலைஞர் தானிஷ் சித்திகியின்  முகத்தைச் சிதைத்து கொடூரம் - அதிர்ச்சி தகவல்  
இந்தியா

புகைப்படக் கலைஞர் தானிஷ் சித்திகியின்  முகத்தைச் சிதைத்து கொடூரம் - அதிர்ச்சி தகவல் 

' புலிட்சர் ' விருது பெற்ற இந்திய புகைப்படக் கலைஞர் தானிஷ் சித்திகி ஆஃப்கானிஸ்தானின் கந்தஹார் பகுதியில் தலிபான்களுக்கும்  ராணுவத்திற்கும் இடையே நடக்கும் போரைப் பதிவு செய்வதார்.

DIN

' புலிட்சர் ' விருது பெற்ற இந்திய புகைப்படக் கலைஞர் தானிஷ் சித்திகி ஆஃப்கானிஸ்தானின் கந்தஹார் பகுதியில் தலிபான்களுக்கும்  ராணுவத்திற்கும் இடையே நடக்கும் போரைப் பதிவு செய்வதற்காக  ஆப்கன் தேசிய பாதுகாப்புப் படையுடன் போர் நடக்கும் பகுதிக்குச் சென்றார்.

எதிர்பாராத விதமாக தலிபான்கள் தாக்குதலில் சிக்கி தானிஷ் சித்திகி பலியானார். அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய நாடுகள் சித்திகின் மரணத்திற்காக தலிபான்களை எச்சரித்தனர் . பின் அடுத்த நாளே தலிபான்கள் சார்பில் " சித்திகி அப்பகுதியில் இருந்த தகவலை அரசு  தெரிவிக்கவில்லை . தெரிந்திருந்தால் தாக்குதலை நடத்தியிருக்க மாட்டோம்" என்றதோடு சித்திகியின் மரணத்திற்கு மன்னிப்பும் கேட்டனர். 

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்று  தானிஷ் சித்திகி இருப்பதைத்  தெரிந்து கொண்டுதான் தலிபான்கள் அவரைக் கொன்றனர். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்  என  அதிர்ச்சியான தகவலை வெளியிட்டது.

தற்போது தானிஷ் சித்திகியின் உடற்கூறாய்வு முடிவு  வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதில் தானிஷ் உடலில் 12 குண்டுகள் இருந்ததாகவும் முகத்திலும் மார்பிலும் வாகனங்களை ஏற்றி எலும்புகள் உடைக்கப்பட்டிருக்கின்றன என்றும்  இறந்த உடலை வாகனத்தில் கட்டி இழுத்துச் சென்றிருப்பதும் தெரிய வந்திருக்கிறது. முழுக்க முழுக்க தலிபான்கள் கொடூரமாக சித்தரவதை செய்து சித்திகியை கொன்று இருக்கிறார்கள் என அமெரிக்க செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது . 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஷ்மீர்: எல்லைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டம் - தீவிர தேடுதல் பணி!

ஆற்றைக் கடக்க ஆட்டுத்தோலைப் பயன்படுத்திய அசிரியன் போர் வீரர்கள்!

நல்லகண்ணு உடல்நிலை: நலம் விசாரித்த விஜய்!

புதுச்சேரி உள்பட 5 இடங்களில் அபுல் கலாம் ஆசாத் ஆசியன் ஆராய்ச்சி மையம்!

சமூக நீதியில் பிறந்த சி. பி. ஆரை விட்டுவிட்டீர்கள்! ப. சிதம்பரத்தை வேட்பாளராக அறிவிக்காதது ஏன்? முதல்வருக்கு தமிழிசை கேள்வி!

SCROLL FOR NEXT