வெள்ளத்தில் சிக்கிய கிராம மக்களை மீட்கும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 
இந்தியா

ம.பி.யில் ஏற்பட்ட வெள்ளத்தால் 240 கிராமங்கள் பாதிப்பு

மத்தியப் பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 240 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் சிவராஜ் சிங் செளகான் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

ANI

மத்தியப் பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 240 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் சிவராஜ் சிங் செளகான் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவ மழை காரணமாக கடந்த சில நாள்களாக மத்தியப் பிரதேசத்தில் கனமழை பெய்து வந்த நிலையில், வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில், பேரிடர் மீட்புக் குழுக்கள், ராணுவம் மற்றும் விமானப்படை ஈடுபட்டு வருகிறது. 

இதுகுறித்து முதல்வர் சிவராஜ் பேசியது:

வடக்கு மத்தியப் பிரதேசத்தில் வெள்ள பாதிப்பு மோசமாக உள்ளது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை, ராணுவம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் 240 கிராமங்களிலிருந்து 5,950 பேரை மீட்டுள்ளனர். மேலும் 1,950 பேரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விமானப்படையின் ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணியில் இணைந்துள்ளது.

மழை குறைந்து வருவதால், சாலைகளில் தேங்கிய வெள்ளநீரும் குறைகிறது. இந்த வெள்ள பாதிப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமருடன் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நுண்ணறிவுக்குப் புலப்படாது!

காரையாறு காணிக்குடியிருப்பில் சிறுத்தை தாக்கி இளைஞா் காயம்

கும்ப ராசிக்குப் பணவரவு: தினப்பலன்கள்!

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 டன் யூரியா, கோதுமை பறிமுதல்

புதுச்சேரியில் ஒப்பந்த ஆசிரியா்கள் 250 போ் கைது

SCROLL FOR NEXT