இந்தியா

மாநிலங்களவை முடக்கும் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர்: வெங்கையா நாயுடு எச்சரிக்கை

DIN

மாநிலங்களவையை முடக்கும் உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என அவைத் தலைவர் வெங்கையா நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே அவையில் பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 11 நாள்களாக அவை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், இன்று காலை மாநிலங்களவை கூடியவுடன் எதிர்க்கட்சிகள் அமளியை தொடர்ந்தனர். இதையடுத்து, மாநிலங்களவையை முடக்கும் உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்படுவார்கள் எனவும், அமளியில் ஈடுபடும் உறுப்பினர்கள் பெயர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் வெங்கையா நாயுடு எச்சரித்துள்ளார். பின், மாநிலங்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல, மக்களவையிலும் அமளியில் ஈடுபட்டதால் காலை 11.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT