நாட்டில் இதுவரை 48.93 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
நாட்டில் இதுவரை 48.93 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை 48.93 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள தகவலில்,
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 51.01 கோடிக்கு மேல் (51,01,88,510) தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 11,79,010 டோஸ் தடுப்பூசிகள் தயாரிப்பில் உள்ளன.
அதேநேரத்தில் இன்று காலை 8 மணி நிலவரப்படி, மாநிலங்களில் 48,60,15,232 தடுப்பூசிகள் இருப்பில் அல்லது பயன்படுத்தப்படாமல் உள்ளன.
மேலும் இதுவரை 48.93 கோடி(48,93,42,295) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 37,55,115 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் ஒரு பகுதியாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு இலவச தடுப்பூசியை வழங்கி வருகிறது. ஜூன் 21 முதல் தொடங்கப்பட்ட புதிய தடுப்பூசி இயக்கத் திட்டத்தின்படி தடுப்பூசி போடப்படுவது அதிகரித்துள்ளது.
மேலும் புதிய திட்டத்தின்படி மத்திய அரசு தடுப்பூசிகளை கொள்முதல் செய்து 75% தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.