இந்தியா

‘சட்டப்பிரிவு 370 நீக்கத்துக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் அமைதியும் வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது’: பிரதமர் மோடி

DIN

சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரில் அமைதியும் வளர்ச்சியும் திரும்பி வருவதாக பிரதமர் மோடி வியாழக்கிழமை தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தன.

இந்நிலையில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு இரண்டு ஆண்டு நிறைவடைந்ததை குறிப்பிட்டு பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

"இது வரலாற்று சிறப்புமிக்க தினம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக மிக முக்கியமான அடியை இன்றைய புதிய ஜம்மு-காஷ்மீர் எடுத்து வைத்திருந்தது. அதன்மூலம் தற்போது இதற்கு முன் இல்லாத அமைதியும், வளர்ச்சியும் அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT