நாடாளுமன்றம் 14வது நாளாக முடக்கம்: ஆக. 9 வரை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியையடுத்து மாநிலங்களவை ஆகஸ்ட் 9 காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியையடுத்து இரு அவைகளும் ஆகஸ்ட் 9 காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே அவையில் பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து அமளியில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இரு அவைகளின் தலைவர்களும் எச்சரிக்கை விடுத்தனர்.
இதையும் படிக்க | ஆக்கத்திற்கல்ல அணு ஆயுதங்கள், அழிவிற்கே!
Advertisement
இந்நிலையில், 14வது நாள் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது முதலே பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்கக்கோரி இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து இரு அவைகளும் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து அமளி நிலவுவதால், திங்கள்கிழமை காலை 11 மணிவரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.