முகப்பு
இந்தியா

மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி வாரம்: எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி வாரத்தில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:52 AM
கோப்புப்படம்
பகிர்:

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி வாரத்தில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஆகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பெகாஸஸ் விவகாரத்தை அவைகளில் விவாதிக்க வேண்டுமென தொடர்ந்து 14 நாள்களாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மீதமுள்ள 5 நாள்களில் நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் தொடர்பாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் காலை 10 மணிமுதல் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.