ஜெகன்மோகன் ரெட்டி (கோப்புப் படம்) 
இந்தியா

'பள்ளிகளில் கரோனா விதிமுறைகள் கடுமையாக்கப்பட வேண்டும்'

பள்ளிகளில் கரோனா விதிமுறைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

DIN

பள்ளிகளில் கரோனா விதிமுறைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஆந்திரத்தில் நேற்று (ஆக. 16) முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், இன்று நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். 

ஆந்திர மாநிலத்தில், கரோனா பரவல் கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.

அரசின் விதிமுறைப்படி, ஒவ்வொரு வகுப்பிலும் 20 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் பள்ளியின் வகுப்பறைகளை அதிகரிப்பது அல்லது பகுதிநேரமாக மாற்றுவது போன்றவற்றை பள்ளி நிர்வாகம் முடிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். 

அதில் பள்ளிகளில் கரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சிறிய அறிகுறி உள்ள மாணவர்களைக் கூட பள்ளியிலேயே பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT