இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின் அடிப்படையில் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் குறித்த தரவுகள் அடங்கிய அறிக்கையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ளன. இந்த அறிக்கையில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் விவரங்கள் அடங்கிய தரவுகள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களில் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
இதையும் படிக்க | அறிவியல் ஆயிரம்: உடல்நலத்தில் நுரையீரலின் பங்கு!
மிசோரம் மாநிலத்தின் தலைநகர் ஐஸ்வாலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் லட்சம் பேரில் 269 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் அருணாச்சலப் பிரதேசத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சம் பேருக்கு 220 ஆக உள்ளது.
பெங்களூருவை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் மூலம் நாட்டில் புற்றுநோய் பாதிப்பைத் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய கொள்கை முடிவுகள் எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.