சோலார் பேனல் ஊழல் - உம்மன் சாண்டி உட்பட 5 பேர் மீதான வழக்கு சிபிஐ -க்கு மாற்றம் 
இந்தியா

சோலார் பேனல் ஊழல் - உம்மன் சாண்டி உட்பட 5 பேர் மீதான வழக்கு சிபிஐ -க்கு மாற்றம்

கேரளத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு  வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொழிலதிபர் சரிதா நாயர் கைது செய்யப்பட்டார்.

DIN

கேரளத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு  வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக நடிகை  சரிதா நாயர் கைது செய்யப்பட்டார்.

கைதானதைத் தொடர்ந்து சரிதா  அப்போதைய முதல்வர் உம்மன் சாண்டி அவரின்  2 அமைச்சர்கள், 2 முன்னாள் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக பாலியல் அத்துமீறல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

பெரும் பரபரப்புடன் பேசப்பட்டு வந்த இந்த வழக்கில்  முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிட்ட 5 பேருக்கு எதிரான வழக்குகளை சிபிஐ  விசாரிக்க தற்போதைய முதல்வர்  பினராயி விஜயன் அரசு கடந்த ஜனவரியில் பரி்ந்துரை செய்தது.

இந்த நிலையில் உம்மன் சாண்டி, காங்கிரஸ் எம்.பி.க்கள், கே.சி.வேணுகோபால், ஹைபி ஈடன், அடூர் பிரகாஷ், காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்து பின்னர் பாஜகவில் இணைந்த அப்துல்லா குட்டி ஆகிய 5 பேர்மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

கடந்த ஏப்ரல் மாதம் சரிதா நாயருக்கு கோழிக்கோடு நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய இணையத் தொடரில் சைத்ரா ரெட்டி!

ஓடிபி விவகாரம்- திமுகவின் வழக்கு தள்ளுபடி

டிரம்ப் விதித்த 25% வரி... ஆடைத் தயாரிப்புத் துறையில் 20 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

காணாமல் போன 3 சிறுவர்கள் சடலமாக மீட்பு: உ.பி.யில் அதிர்ச்சி!

அடுத்த 20 ஆண்டுகளுக்கு படம் இயக்கவுள்ள இயக்குநர் பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT