முகப்பு
இந்தியா

காஷ்மீர் : தீவிரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாம்பூர் பகுதியில் இன்று  (வெள்ளிக்கிழமை) பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் நடந்த தாக்குதலில் ஒரு தீவிரவாதி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Updated On : 20 ஆகஸ்ட், 2021 at 12:48 PM
காஷ்மீர் : தீவிரவாதி சுட்டுக்கொலை
பகிர்:

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாம்பூர் பகுதியில் இன்று  (வெள்ளிக்கிழமை) பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் நடந்த தாக்குதலில் ஒரு தீவிரவாதி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த சில நாட்களாகவே காஷ்மீரின் சில பகுதிகளில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. நேற்று(ஆக-19) தனமண்டி பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு தீவிரவாதியும் ராணுவ அதிகாரியும் பலியானார்கள்.

இந்நிலையில் புல்வாமாவில் தேடுதலில் இருந்த பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. 

Advertisement

இதில் அடையாளம் தெரியாத தீவிரவாதி உயிரிழந்ததாக பாதுகாப்புப் படை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.