இந்தியா

இலவச மருத்துவ திட்டம்: ஒடிசா முதல்வர் தொடக்கி வைத்தார்

DIN


ஒடிசா மாநிலத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பணமில்லாமல் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெறும் வகையில் சுகாதார ஸ்மார்ட் அட்டை வழங்கும் திட்டத்தை மாநில முதல்வர் நவீன் பட்நாயக் இன்று தொடக்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் மூலம், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த் 3.5 கோடி மக்கள், மாநிலத்தில் உள்ள 200 மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெற முடியும்.

போன்டா பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்களுக்கு, சுகாதார ஸ்மார்ட் அட்டைகளை வழங்கி நவீன் பட்நாயக் திட்டத்தைத் தொடக்கி வைத்துள்ளார். இந்த அட்டை செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. இந்த அட்டையைப் பயன்படுத்தி சிகிச்சை பெறும் ஏழை எளிய மக்களின் மருத்துவச் செலவை மாநில அரசே வழங்கும் வகையில் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம்

மீன்கள் விலை உயா்வு: விற்பனையும் அமோகம்

நாட்டறம்பள்ளி வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேம்

கெளரவிப்பு...

SCROLL FOR NEXT