முகப்பு
இந்தியா

தலிபான்களுக்கு ஆதரவாக பதிவு: மருத்துவ மாணவர் உள்பட 14 பேர் கைது

சமூகவலைதளங்களில் தலிபான்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாகக் கூறி மருத்துவ மாணவர் உள்பட 14 பேரை அசாம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Updated On : 21 ஆகஸ்ட், 2021 at 2:50 PM
கோப்புப்படம்
பகிர்:

சமூகவலைதளங்களில் தலிபான்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாகக் கூறி மருத்துவ மாணவர் உள்பட 14 பேரை அசாம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தலிபான்களுக்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்ததாகக் கூறி மருத்துவ மாணவர் உள்பட 14 பேரை அசாம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் எனப்படும் உபா, தகவல் மற்றும் தொழில்நுட்பச் சட்டம், குற்ற நடைமுறைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை அலுவலர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "சமூக வலைதளங்களில் உணர்வுகளை தூண்டு வகையில் கருத்து பதிவிடுவதை தொடர்ந்து கண்காணித்துவருகிறோம். கம்ரூப் பெருநகரம், பார்பேட்டா, துப்ரி மற்றும் கரீம்கஞ்ச் மாவட்டங்களிலிருந்து தலா இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Advertisement

தர்ராங், கச்சார், ஹைலகண்டி, தெற்கு சல்மாரா, கோல்பாரா மற்றும் ஹோஜாய் மாவட்டங்களிலிருந்து தலா ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய பாதுகாப்புக்கு எதிராகவும் தலிபான்களுக்கு ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.