முகப்பு
இந்தியா

ஸ்ரீநகர் துப்பாக்கிச் சூடு - மேலும் ஒரு தீவிரவாதி பலி

காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரில் நேற்று (ஆக-23 திங்கள்கிழமை) பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளும் நடைபெற்ற தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:59 AM
ஸ்ரீநகர் துப்பாக்கிச் சூடு - மேலும் ஒரு தீவிரவாதி பலி
பகிர்:

காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரில் நேற்று (ஆக-23 திங்கள்கிழமை) பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளும் நடைபெற்ற தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை.

ஸ்ரீநகரின் அலூச்சி பாக் பகுதியில் தீவிர தேடுதலில் இருந்த பாதுகாப்பு படையினரிடம் சிக்கிக்கொண்ட தீவிரவாதிகள் முதலில் தாக்குதலை தொடர்ந்திருக்கிறார்கள்.

பின் பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறை இணைத்து நடத்திய தாக்குதலில் லஷ்கர்-ஏ-தொய்பா  அமைப்பைச் சேர்த்த முக்கிய பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் டிஆர்எப் எனப்படும் 'தி ரெசிஸ்டன்ஸ் பிரென்ட் ' என்கிற அமைப்பிலும் தொடர்புடையவர்கள்.

தீவிரவாதிகள் அப்பாஸ் ஷேக் மற்றும் சாகிப் மன்சூர் இருவரும் காஷ்மீரில் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியவர்கள் என்றும் பல குண்டுவெடிப்பு வழக்கிலும் தொடர்புடையவர்கள் என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது இன்று ஆக-24 வடக்கு ஸ்ரீநகர் பகுதியில் மேலும் ஒரு அடையாளம் தெரியாத தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 

பின் அங்கிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை காவல்துறையினர் கைப்பற்றியிருக்கிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →