இந்தியா

கேரளத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கட்டாயம் - முதல்வர் அறிவிப்பு

DIN

இந்தியா முழுவதும் கரோனா அலை தீவிரம் கொண்டிருக்கிற நிலையில்  எத்தனை கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டாலும் நோய் தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 

இந்நிலையில் நாட்டில் அதிக தொற்றுகளை சந்தித்து வரும் கேரள மாநிலத்தில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலுக்கு வரும் என மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக ஓணம் , மொஹரம் பண்டிகைகளுக்காக ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதிகரித்து வரும் கரோனா தாக்குதலால் இந்த கட்டாய ஊரடங்கை அறிவித்திருக்கிறார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் தொற்றில் பாதித்தவர்கள் 24,296 பேர் என்றும் பலியானவர்கள் 174 பேர் எனத் தெரிவித்ததோடு கரோனாவால் மாநிலம் முழுவதும் பாதிக்கப்படுவோர் சதவிகிதம் 18.04 ஆக உயர்ந்திருக்கிறது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகிரி அருகே விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோயிலில் நவசண்டி ஹோமம்

தண்ணீா் பற்றாக்குறை அதிகரிப்பு

ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

பல்லடம் பேருந்து நிலையக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

SCROLL FOR NEXT