முகப்பு
இந்தியா

ஆந்திரத்தில் மேலும் 1,539 பேருக்கு கரோனா தொற்று

ஆந்திரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,539 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
கோப்புப்படம்
பகிர்:

ஆந்திரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,539 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஆந்திரத்தில் ஒரு நாளில் மட்டும் புதிதாக 1,539 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,07,730ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 12 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,778ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,140 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக 19,79,504ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 14,448 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.