முகப்பு
இந்தியா

மேற்கு வங்கம் - ரூ.18 லட்சம் மதிப்புள்ள வெள்ளிக்கட்டிகள் பறிமுதல்

மேற்கு வங்கம் மாநிலம் ஹவுரா ரயில் நிலையத்தில் ஆவணகளின்றி கொண்டு செல்லப்பட்ட 22.18 கிலோ வெள்ளிக்கட்டிகளை ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் பறிமுதல் செய்தனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
கோப்புப்படம்
பகிர்:

மேற்கு வங்கம் மாநிலம் ஹவுரா ரயில் நிலையத்தில் ஆவணகளின்றி கொண்டு செல்லப்பட்ட 22.18 கிலோ வெள்ளிக்கட்டிகளை ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் பறிமுதல் செய்தனர்.

ஹவுரா ரயில் நிலையத்தில் நேற்று (ஆக-25) அன்று சந்தேகத்திற்கு இடமான முறையில் பெரிய பைகளை தூக்கிச் சென்றுகொண்டிருந்த இருவரை பரிசோதனை செய்தபோது விற்பனை ரசீது  இல்லாமல் கொண்டுவரப்பட்ட 22.18 கிலோ வெள்ளிக்கட்டிகள் இருப்பதை பாதுகாப்பு வீரர்கள் உறுதி செய்தனர்.

இதுகுறித்து இருவரிடம் விசாரித்த போது வரியில் இருந்து தப்பிப்பதற்காக விற்பனை ரசீது இல்லாமல் வெள்ளியை வாங்கியிருப்பது தெரியவந்திருக்கிறது. பின் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளிக்கட்டிகளை மாநில ஜிஎஸ்டி துறையிடம் ஒப்படைத்தனர்.

மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளியின் மதிப்பு ரூ.18 லட்சம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →