புதிய அந்நிய நேரடி முதலீடு விதிகளின் காரணமாக யாஹூ இந்தியாவில் செய்தி இணையதளத்தை மூடியுள்ளது.
அந்நிய நேரடி முதலீட்டு விதிகளின் புதிய ஒழுங்குமுறைகள் அக்டோபர் மாதம் முதல் அமலுக்குவரவுள்ளது. அதன்படி, இந்தியாவில் உள்ள இணைய ஊடக நிறுவனங்கள் மத்திய அரசின் ஒப்புதலோடு 26 சதவிகிதம் வரைதான் அந்நிய நேரடி முதலீட்டை பெற முடியும்.
வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் செய்தி நிறுவனங்களை தொடங்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் உள்ள வந்த செய்தி இணையதளத்தை யாஹூ நிறுவனம் மூடியுள்ளது. யாஹூ நியூஸ், யாஹூ கிரிக்கெட், பைனான்ஸ், எண்டர்டெயின்மென்ட், மேக்கர்ஸ் இந்தியா ஆகிய இணையதளங்கள் மூடப்பட்டுள்ளது.
இருப்பினும், யாஹூ இ-மெயில், தேடல் இயந்திரம் ஆகியவை மூடப்படாது என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து யாஹூ இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியில், "ஆகஸ்ட் 26ஆம் முதல், யாஹூ இந்தியா எந்தவிதமான செய்திகளையும் வெளியிடாது. ஆனால், யாஹூ கணக்குகள், இ - மெயில், தேடல் இயந்திரம் ஆகியவை தொடர்ந்து செயல்படும். ஆதரவளித்த அனைத்து அனைவருக்கும் நன்றி.
இதையும் படிக்க | ஆப்கனிலிருந்து பயங்கரவாதம் ஊடுருவினால் ஒடுக்கப்படும்: முப்படை தளபதி
இந்த முடிவு எளிதாக எடுதக்கப்பட்ட ஒன்று அல்ல. இருப்பினும், இந்திய ஊடக நிறுவனங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் மேற்கொள்ளும் முதலீடுகளை கட்டுப்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட ஒழுங்குமுறை சட்டங்களின் காரணமாக யாஹூ இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது. இந்தியாவுடன் இந்தியாவுடன் யாஹூ நிறுவனம் நீண்ட காலமாகவே ஒன்றிணைந்து செயல்பட்டுவருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக பயனாளர்களுக்கு செய்தி வெளியிட்டதை நினைத்து பெருமைப்படுகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.