முகப்பு
இந்தியா

கேரளத்தில் ஒரேநாளில் 32,801 பேருக்கு கரோனா

கேரளத்தில் ஒரேநாளில் 32,801 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

கேரளத்தில் ஒரேநாளில் 32,801 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 1,70,703 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் புதிதாக 32,801 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
அதிகபட்சமாக மலப்புரத்தில் 4,032, திரிச்சூரில் 3,953, எர்ணாகுளத்தில் 3,627 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் இன்று 179 பேர் பலியானார்கள். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 20,313ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவிலிருந்து இன்று 18,573 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 37,30,198ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,95,254 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். 4,98,491 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.   

முழு கட்டுரையைப் படிக்க →