இந்தியாவில் ஒரேநாளில் மேலும் 42,909 பேருக்கு கரோனா
இந்தியாவில் ஒரேநாளில் மேலும் 42,909 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரேநாளில் மேலும் 42,909 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 42,909 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3.27 கோடியாக உயர்ந்துள்ளது.
இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 380 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த உயிரிழப்பு 4,38,210 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 34,763 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 3,19,23,405 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.
இதையும் படிக்க- குழந்தை பாக்கியம்பெற கோகுலாஷ்டமியில் பூஜை
கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 3,76,324 ஆக உள்ளது. இதுவரை 63.43 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 14,19,990 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.
இதுவரை மொத்தம் 52,01,46,525 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.