இந்தியா

ராஜஸ்தானில் மீண்டும் அமைச்சரவை மாற்றம்?

DIN


ராஜஸ்தானில் மீண்டும் அமைச்சரவை மாற்றப்படுவது குறித்து முதல்வர் அசோக் கெலாட் மறைமுகமாகப் பேசியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

பணவீக்கத்துக்கு எதிராக டிசம்பர் 12-ம் தேதி நடத்தப்படவுள்ள போராட்டம் குறித்து கட்சித் தொண்டர்களிடம் முதல்வர் கெலாட் ஆலோசனை நடத்தினார்.

தகவல்களின் அடிப்படையில் அந்தக் கூட்டத்தில் முதல்வர் கெலாட் பேசியது:

"கடினமான காலங்களில் காங்கிரஸுடன் துணை நின்ற பல எம்.எல்.ஏ.க்களுக்கு, சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டு நவம்பரில் மாற்றியமைக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் இடம் ஒதுக்க முடியவில்லை. இருந்தபோதிலும், அவர்களது தொகுதிப் பணிகளில் எவ்விதத் தடையும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வோம். கட்சித் தலைமை அனுமதித்தால், மற்றொரு அமைச்சரவை மாற்றத்தின்போது, அவர்களுக்கும் அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படும்."

கூட்டத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கோவிந்த் சிங் மற்றும் ராஜஸ்தான் மேலிடப் பொறுப்பாளர் அஜய் மக்கான் ஆகியோரும் பங்கேற்றனர்.

பகுஜன் சமாஜ் எம்எல்ஏ-க்கள் 6 பேரில் 5 பேர் காங்கிரஸில் இணைந்தும், சுயேச்சைகள் 13 பேரும் காங்கிரஸுக்குத் துணை நின்றனர். ஆனால், அமைச்சரவை மாற்றத்தின்போது அவர்கள் இடம் ஒதுக்கப்படாதது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிக்கி ஹேலி இஸ்ரேல் பயணம்!

குற்றால அருவிகளில் குளிக்க 7 ஆவது நாளாக தடை நீடிப்பு

'வெட்கக்கேடானது': பிரஜ்வல் கடவுச்சீட்டை ரத்து செய்ய மோடிக்கு சித்தராமையா கடிதம்!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.880 குறைந்தது

கனடாவில் தொடரும் வன்முறை: சிறுவன் உள்பட மூவர் பலி!

SCROLL FOR NEXT