முகப்பு
இந்தியா

டிச.15 தொடங்க இருந்த சர்வதேச விமான சேவை ஒத்திவைப்பு

இந்தியாவில் வருகிற டிச.15 முதல் வெளிநாடுகளுக்கு பயணிகள் விமான சேவை தொடங்க இருந்த நிலையில் தற்போது ஒமைக்ரான் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

Updated On : 1 டிசம்பர், 2021 at 3:36 PM
டிச.15 தொடங்க இருந்த சர்வதேச விமான சேவை ஒத்திவைப்பு
பகிர்:

இந்தியாவில் வருகிற டிச.15 முதல் வெளிநாடுகளுக்கு பயணிகள் விமான சேவை தொடங்க இருந்த நிலையில் தற்போது ஒமைக்ரான் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

கரோனா தொற்றின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் விமானச் சேவைகள் வருகிற டிச.15 ஆம் தேதி முதல் தொடங்கும் என விமான போக்குவரத்துத் துறை  கடந்த நவ.26 அன்று அறிவித்திருந்தது.

Advertisement

நேற்று (நவ.30) நள்ளிரவு இந்திய விமான போக்குவரத்துகள் தென் ஆப்ரிக்கா , ஜப்பான் போன்ற நாடுகளுக்குச் செல்ல தடை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக  சர்வதேச பயணிகள் விமான சேவையை ஒத்திவைப்பதாக விமான போக்குவரத்துத் துறை  அறிவித்திருக்கிறது.

மேலும் ஒமைக்ரான் பாதிப்புள்ள தென்னாப்பிரிக்கா, சீனா, நியூஸிலாந்து, ஹாங்காங், பிரிட்டன், பிரேஸில், வங்கதேசம், போட்ஸ்வானா, மோரீஷஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூா், இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வருவோருக்கு விமான நிலைய வளாகத்திலேயே ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.