நாடு முழுவதும் 125 கோடி தடுப்பூசிகள் செலுத்தி சாதனை: மத்திய அரசு
நாடு முழுவதும் 125 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் செலுத்தி சாதனை படைத்துள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 125 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் செலுத்தி சாதனை படைத்துள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இன்று காலை 7 மணி நிலவரப்படி நாட்டில் 1,24,96,19,515 தவணை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக தரவுகள் வெளியான நிலையில், தற்போது 125 கோடி தவணைகளை கடந்து தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
வயதுவாரி விவரங்கள்:
| 18 - 44 வயது | முதல் தவணை - 46,11,59,223 இரண்டாம் தவணை - 23,00,04,760 |
| 45 - 59 வயது | முதல் தவணை - 18,53,50,013 இரண்டாம் தவணை - 12,22,12,176 |
| 60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 11,60,67,930 இரண்டாம் தவணை - 8,00,32,771 |
| சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,83,998 இரண்டாம் தவணை - 95,09,164 |
| முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,79,363 இரண்டாம் தவணை - 1,65,20,117 |
| மொத்தம் | 1,24,96,19,515 |