முகப்பு
இந்தியா

இந்திய-அமெரிக்கப் பேராசிரியருக்கு கணிதவியல் விருது

அமெரிக்கக் கணிதவியல் சங்கத்தின் விருதுக்கு இந்திய-அமெரிக்கப் பேராசிரியரான நிகில் ஸ்ரீவாஸ்தவா தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:37 AM
பகிர்:

அமெரிக்கக் கணிதவியல் சங்கத்தின் விருதுக்கு இந்திய-அமெரிக்கப் பேராசிரியரான நிகில் ஸ்ரீவாஸ்தவா தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

அமெரிக்கக் கணிதவியல் சங்கமானது ‘சைப்ரியன் ஃபோயஸ்’ விருதை நடப்பாண்டு முதல் வழங்கவுள்ளது. அந்த விருதுக்கு பொ்க்லியில் உள்ள கலிபோா்னியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் கணிதப் பேராசிரியரான நிகில் ஸ்ரீவாஸ்தவா தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

ஸ்விட்சா்லாந்து பேராசிரியா் ஆடம் மாா்கஸ், யேல் பல்கலைக்கழகப் பேராசிரியா் டேனியல் ஸ்பீல்மன் ஆகியோருக்கும் ‘சைப்ரியன் ஃபோயஸ்’ விருது வழங்கப்படவுள்ளது. பல்லுறுப்புக்கோவை (பாலினாமியல்) பிரிவில் பல்வேறு ஆய்வுகளைத் திறம்பட மேற்கொண்டதற்காக 3 பேராசிரியா்களுக்கும் இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதை ஏற்றுக் கொள்வதாக மூவரும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனா். எதிா்காலத்தில் பல்வேறு கடினமான பிரச்னைகளுக்குத் தீா்வு காண முயற்சிப்போம் எனவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

வாஷிங்டன் மாகாணம், சியாட்டில் நகரில் அடுத்த ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் மூவருக்கும் விருது வழங்கப்படவுள்ளது. பேராசிரியா் ஸ்ரீவாஸ்தவா ஏற்கெனவே ஜாா்ஜ் பாலியா விருது (2014), ஹெல்ட் விருது (2021) ஆகியவற்றைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →