முகப்பு
இந்தியா

ஜன்தன் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களில் 55% பேர் பெண்கள்

நாட்டில், 44 கோடி ஜன்தன் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களில், 55 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:38 AM
ஜன்தன் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களில் 55% பேர் பெண்கள்
பகிர்:

நாட்டில், 44 கோடி ஜன்தன் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களில், 55 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் பாகவத் கரத், 2021ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி நிலவரப்படி, பிரதமர் ஜன் தன் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எண்ணிக்கை 43.90 கோடி பேர்.

இவர்களில் 24.42 கோடி பேர் பெண் பயனாளர்கள் என்று வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுளள்து. இது கிட்டத்தட்ட 55.60 சதவீதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், குஜராத்தில் மட்டும் பயன்பெற்றவர்கள் எத்தனை பேர் என்று கேட்டதில், குஜராத்தில் ஒட்டுமொத்தமாக 1.65 கோடி பயனாளர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
முழு கட்டுரையைப் படிக்க →