இந்தியா

ஒமைக்ரான்: தில்லியில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா

ஒமைக்ரான் வகை கரோனா பரவலால் நாட்டின் தலைநகரான தில்லியில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.

DIN

ஒமைக்ரான் வகை கரோனா பரவலால் நாட்டின் தலைநகரான தில்லியில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 51 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தில்லியில் இதுவரை மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,41,449-ஆக அதிகரித்துள்ளது.

விமான நிலையங்கள் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பால் கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 50,023-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 41,272 பேருக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனையும், 8,751 பேருக்கு ரேபிட் ஆண்டிஜென் பரிசோதனையும் செய்யப்பட்டது.

தில்லி மாநகரில் 93 பகுதிகள் கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது 152 பேர் வீட்டுத் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். 376 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனமகிழ்ச்சி ஏற்படும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

4 பைக்குகள் திருட்டு: இளைஞா் கைது

மானுடவியலின் மகத்துவம்

அவல்பூந்துறையில் ரூ.10.45 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

காவல் துறை எதிர்கொள்ளும் சவால்கள்

SCROLL FOR NEXT